தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் கொழுக்கட்டை.., எப்படி செய்வது?
தேங்காய் பால் கொழுக்கட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஓர் இனிப்பு வகை.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 கப்
- உப்பு- ஒரு சிட்டிகை
- தேங்காய்- 2
- நாட்டு சர்க்கரை- 2 கப்
- நெய்- 2 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, நெய் மற்றும் சுடு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து திக்கான பால் எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே மிக்ஸி ஜாரி வடிகட்டிய தேங்காயை சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பால் மற்றும் அரிசி மாவு உருண்டைகளை சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் இதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
இறுதியாக இதில் முதலில் எடுத்த தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறினால் சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |