தித்திக்கும் சுவையில் பால் கொழுக்கட்டை.., 15 நிமிடத்தில் செய்யலாம்
இந்த சுவையான பால் கொழுக்கட்டையை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், விநாயகர் சதுர்த்திக்கு இந்த சுவையான பால் கொழுக்கட்டையை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி மாவு- 1 கப்
- உப்பு- 1 சிட்டிகை
- நெய்- ¼ ஸ்பூன்
- வெல்லம்- 1 கப்
- தேங்காய்- 1
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, நெய் மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சேர்த்து அரைத்து கெட்டியான பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதே தேங்காயில் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதன்பின் ஒரு பாத்திரத்தில் 2ஆவதாக எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதித்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை சேர்த்து வேகவைக்கவும்.
பின் இதில் வெல்லப்பாகு, ஏலக்காய் தூள், நெய் சேர்த்து கெட்டியாகி வந்ததும் முதலில் எடுத்த தேங்காய் பால் சேர்த்து இறக்கினால் சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |