டேவிட் மில்லர் அணி 49 ரன்னுக்கு ஆல்அவுட்! சன்ரைஸர்ஸ் இமாலய வெற்றி
SA20 போட்டியில் சன்ரைஸர்ஸ் அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
186 ஓட்டங்கள்
போலண்ட் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய சன்ரைஸர்ஸ் அணியில் டி காக் 42 (24) ஓட்டங்களும், பேர்ஸ்டோவ் 31 (33) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் வந்த பிரீட்ஸ்கி 31 ஓட்டங்களில் வெளியேற, அதிரடியில் மிரட்டிய ஜோர்டன் ஹெர்மன் (Jordan Hermann) 28 பந்துகளில் 62 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாச சன்ரைஸர்ஸ் அணி 186 ஓட்டங்கள் குவித்தது.
சரிந்த விக்கெட்டுகள்
அடுத்து ஆடிய பார்ல் ராயல்ஸ் அணியில் சீட்டுக்கட்டுபோல் விக்கெட்டுகள் சரிந்தன. 11.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பார்ல் அணி 49 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக அஸா ட்ரிப் 14 ஓட்டங்கள் எடுத்தார். அணித்தலைவர் டேவிட் மில்லர் 7 ஓட்டங்கள் எடுத்தார்.
மிரட்டலாக பந்துவீசிய நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளும், தரிந்து ரத்னாயாகே மற்றும் மில்னே தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |