20 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசிய அணி! டி20யில் புதிய சாதனை
SA20 போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்களையும் வீச சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றையப் போட்டியில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணியில் ஜோ ரூட் (Joe Root) ஆட்டமிழக்காமல் 78 (56) ஓட்டங்களும், மில்லர் 29 (18) ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்தது. வில் ஜேக்ஸ், போஸ்ச், செனுரன் மற்றும் சிம்மோன்ட்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது. வில் ஜேக்ஸ் 56 ஓட்டங்கள் எடுத்தார்.
இப்போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி சுழற்பந்து வீச்சாளர்களை வைத்தே 20 ஓவர்களையும் வீசியது.
இதன்மூலம் டி20 வரலாற்றில், 20 ஓவர்களுக்கும் வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தாமல், சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து மட்டுமே வீசிய முதல் அணி எனும் அரிய சாதனையை பார்ல் ராயல்ஸ் படைத்தது.
அந்த அணியின் பிஜுர்ன் ஃபோர்டுன், துனித் வெல்லாலகே, முஜீப் உர் ரஹ்மான், நிபயோம்ஸி பீட்டர் மற்றும் ஜோ ரூட் தலா 4 ஓவர்கள் வீசினர்.
Spin it to win it 🔥🫡 pic.twitter.com/kCFa7xi1WG
— Paarl Royals (@paarlroyals) January 25, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |