காலை உணவிற்கு சத்தான பச்சை பயிறு அடை.., எப்படி செய்வது?
காலை உணவை என்பது மிகவும் முக்கியம். இவற்றை தவிர்ப்பதால், உடல் சீக்கிரமாக சோர்வடைந்து விடும்.
அந்தவகையில், காலை உணவிற்கு சத்தான பச்சை பயிறு அடை எப்படி செய்வது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை பயிறு- 3 கப்
- பூண்டு- 3 பல்
- இஞ்சி- 1 துண்டு
- பச்சைமிளகாய்- 3
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- வெங்காயம்- 1
- கேரட்- 1
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சை பயிரை சேர்த்து இரண்டு முறை நன்கு கழுவிக்கொள்ளவும்.
பின் இவற்றை தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பச்சை பயிறு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

இதனைதொடர்ந்து இவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கு கலந்துகொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் தவா வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சத்தான பச்சை பயிறு அடை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |