நாவூறும் சுவையில் சத்தான பச்சைப்பயிறு பாயாசம்.., எப்படி செய்வது?
Pachai payaru payasam recipe- பச்சை பயிறு உடலிற்கு ஒரு ஆரோக்கியமான தானியம் ஆகும்.
இது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. முளைகட்டிய பச்சைப்பயறு அதிக புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களைக் கொண்ட ஒரு சிறந்த ஆரோக்கிய உணவாகும்.
இது உடல் எடையைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
அந்தவகையில், நாவூறும் சுவையில் சத்தான பச்சைப்பயிறு பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சைப்பயறு - 1 கப்
- நெய் - 3 ஸ்பூன்
- திராட்சை - 5
- முந்திரி - 5
- தேங்காய் - ½
- வெல்லம் - 1½
- கப் பால் - 1 கப்
- ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
- தேங்காய் பால் - ½ கப்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் பச்சைப்பயறு சேர்த்து வறுத்து குக்கரில் தண்ணீர் சேர்த்து 6 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பின் ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் திராட்சை, முந்திரி, தேங்காய் துண்டுகளை வறுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம், தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில், வேகவைத்த பச்சைப்பயறு, கரைத்த வெல்லம், சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின்னர் ஆறவைத்த பாலை சேர்த்து கொதிக்க வைத்து ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, வறுத்த திராட்சை, வறுத்த தேங்காய், சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
இறுதியாக கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கலந்தால் சுவையான பச்சைப்பயறு பாயாசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |