வாஸ்து: வீட்டில் இந்த ஒரு பொருளை மறைத்து வைத்தால் போதும் பணக்கஷ்டம் தீருமாம்
வீட்டில் பணம் நிரம்பி வழிய படிகாரம் வைத்து செய்யவேண்டிய பரிகாரம் குறித்து பார்ப்போம்.
அதற்கு முதலில் நமக்கு ஒரே ஒரு துண்டு படிகாரம் இருந்தால் போதுமானது.
வாஸ்து சாஸ்திரத்தில் இந்த படிகாரத்தை கொண்டு பலவிதமான பயன்களை பெற முடியும்.
இதற்கு ஒரு துண்டு பரிகாரத்தை வாங்கி அதை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு விடுங்கள்.
பாத்திரத்தை மூடி போட்டு மூடக் கூடாது. இதை வீடு அலுவலகம் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்து யார் கண்ணிலும் படாதவாறு வைத்து விடுங்கள்.
இதன் பிறகு உங்களுக்கு இருக்கும் அனைத்து வித வாஸ்து பிரச்சனைகளும் படி படியாக குறைய தொடங்கும்.
இந்த படிகாரம் திறந்த வெளியில் இப்படி இருக்கும் போது அதன் நிறம் மாறக் கூடும்.
அப்படி மாறும் போது அந்த படிகாரத்தை எடுத்து ஓடும் நீரில் விட்டு விட்டு, புதிய பரிகாரத்தை வாங்கி வைத்து விடுங்கள்.
இந்த படிகாரம் வாஸ்து தோஷத்தை மட்டுமல்ல, பணத்தை ஈர்க்கும் ஆற்றலையும் கொடுக்க கூடியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |