100க்கு மேற்பட்ட IAS, IPS அதிகாரிகளை உருவாக்கியுள்ள கிராமம் - வீட்டுக்கு ஒரு அரசு ஊழியர்
இந்தியாவின் உயரிய பதவிகளாக IAS, IPS போன்ற பதவிகள் கருதப்படுகிறது. இந்த பதவிகளை பெற, UPSC மூலம் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.
நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் இந்த தேர்வை எழுதினாலும், அதில் சிலர் மட்டுமே இதில் தேர்ச்சி பெறுகின்றனர்.
வீட்டுக்கு ஒரு அரசு அதிகாரி
ஆனால் இங்கு ஒரு கிராமத்தில், 100 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தின் தர் மாவட்டத்தில் படியால்(padiyaal) கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 5,000 ஆகும். இந்த கிராமத்தில் உள்ள 90% பேர் கல்வியுறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
இந்த கிராமத்தின் 90% மக்கள் பில்(Bhil) என்னும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். இங்கு ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் ஒரு அதிகாரிகள் உள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள், வனத்துறை அதிகாரிகள், மருத்தவர்கள் என 300 பேர் அரசு அதிகாரிகளாக உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் NEET, IIT JEE போன்ற கடினமான தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இந்த ஆண்டு 7 பள்ளிக் குழந்தைகளில், 4 பேர் நீட் தேர்விலும், , 3 பேர் JEE தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த கிராமத்தின் ஓய்வு பெற்ற அதிகாரிகள், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |