பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியர் ஒருவர்.., தற்போது மண் சுமந்து தினக்கூலிக்கு செல்கிறார்: யார் அவர்?
இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற பெற்றவர் தற்போது தினக்கூலிக்கு வேலை செய்து வருகிறார்.
யார் அவர்?
இந்திய மாநிலமான தெலங்கானாவைச் சேர்ந்தவர் தர்ஷனம் மொகிலையா (Mogulaiah). இவர், வீணை போன்ற ஒரு சரம் கொண்ட கருவியான கின்னரா என்ற பழங்குடி இசைக்கருவியை இசைக்கும் கலைஞர் ஆவார்.
இவருக்கு கடந்த 2022 -ம் ஆண்டு கின்னரா கருவியை புதுப்பித்ததற்காக இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
அப்போதைய தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தர்ஷனம் மொகிலையாவுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அரசு சார்பில் வீட்டு மனை ஒதுக்குவதாகவும், அதனுடைய கட்டுமானம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.1 கோடி வழங்குவதாகவும் அறிவித்தார்.
தினக்கூலி வேலை
இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற தர்ஷன் மொகிலையா, ஐதராபாத் அருகே துர்க்காயமஞ்சலில் உள்ள கட்டுமான தளத்தில் வேலை செய்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, "என் மகன்களில் ஒருவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறார். எனக்கும் எனது மகனுக்கும் ஒரு மாத மருத்துவ செலவு மட்டுமே ரூ.7,000 ஆகிறது.
அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்ட ரூ.10,000 சமீபத்தில் நிறுத்தப்பட்டது. அதற்கு அதிகாரிகளால் எதுவும் செய்யமுடியவில்லை.
அரசு கூறியிருந்த ரூ.1 கோடி மானியத்துடன் வீட்டு மனை ஒதுக்குவதாக கூறியதும் நிலுவையில் இருக்கிறது என்கின்றனர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |