பல கோடிகள் சொத்து! கனடா வரை கொடிகட்டி பறக்கும் தமிழர்
தமிழகத்தின் திருநெல்வேலியை சேர்ந்தவர் ஏ.டி பத்மாசிங் ஐசக். இவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் ஆச்சி குழுமம். இன்று ஆச்சி மசாலா தமிழகம் மட்டும் இல்லாமல் உலகளவில் பலர் பயன்படுத்தும் மசாலா பிராண்டாக உள்ளது.
அச்சி குழுமத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுவதுடன் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடக்கிறது.
ஆச்சி குழுமத்தின் கீழ் ஆச்சி மசாலா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பைசஸ் & ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பெஷல் ஃபுட்ஸ் பிரைவேட் ஃபுட்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் உள்ளன.
ஆச்சி நிறுவனம் துவங்குவதற்கு முன்பு பிபிஏ பட்டதாரியான பத்மாசிங் ஐசக் 50,000 ரூபாய் சம்பளத்திற்காகப் பணிபுரிந்து வந்தார். ஆனால் இவருக்கு எப்படியாவது மிகப் பெரிய ஒரு நிறுவனத்தினைக் கட்டமைக்க வேண்டும் என்று கனவு இருந்தது.
ஒருவேலை தான் எதிர்பார்த்த இலக்கை அடைவதில் தோல்வி அடைந்தாலும் தனக்குத் தானே ஊக்கம் அளித்துக்கொண்டு அதில் எப்படி வெற்றிபெறுவது என்றும் விடா முயற்சியாகப் போராடுவேன் - பத்மாசிங் ஐசக்
முதலில் மசாலா பொருட்கள் மட்டுமே தயாரித்து வந்த ஐசக் மசாலாவுடன், கோதுமை பொருட்கள், ஊறுகாய், புளி சாத பொடி, பிஸ்கேட் மற்றும் ஜாம் போன்றவற்றையும் தயாரிக்கத் துவங்கி இன்று சத்துணவுகள், ஆயுர்வேத பொருட்கள் போன்றவற்றையும் தயாரித்து வருகிறார்.
தான் புதிதாக ஒரு தயாரிப்பினை வெளியிடுகிறேன் என்றால் அதன் தரம் முதலில் என்னைத் திருப்தி படுத்தினால் மட்டுமே சந்தைக்குக் கொண்டு செல்வேன் - பத்மாசிங் ஐசக்
ஆச்சி மசாலா தயாரிப்புகள் ஐக்கிய அமெரிக்கா, கனடா, யு.கே, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா குடியரசு, D.R.காங்கோ, கென்யா, தன்சானியா, பப்புவா நியூ கினியா, மொசாம்பிக், மொரிஷியஸ், சீஷெல்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சவுதி அரேபியா இராச்சியம், லெபனான், இலங்கை, மாலதீவு, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கிறது.