இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்... வெளிவரும் புதிய பின்னணி
தெற்கு காஷ்மீர் பகுதியான பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக, இரு நாடுகளும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளால் பல விபரீதங்கள் ஏற்படலாம் என்றே கூறப்படுகிறது.
மிக மோசமான தாக்குதலாக
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
பலர் காயங்கலுடன் தப்பியுள்ளனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியா முன்னெடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகளால் பல விபரீதங்கள் ஏற்படலாம் என்றே நிபுணர்கள் தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |