பஹல்காம் பயங்கரவாதிகளின் வீடுகள் வெடிகுண்டு, புல்டோசர் மூலம் தகர்ப்பு: வெளியான வீடியோ
பஹல்காம் பயங்கரவாதிகளின் வீடுகள் வெடி மற்றும் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டன.
26 பேர் மரணம்
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கண்டனங்களைப் பெற்றது. இது மனிதநேயத்தின் மீதான ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்று கனடாவும் கூறியது.
இந்த கொடூர தாக்குதலுக்கு தி ரெசிஸ்டஸ் பிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
House of #terrorist Asif Sheikh, who was #allegedly involved in #Pahalgam terror attack, was #blownup in #Jammu and #Kashmir's Tral. More details awaited. pic.twitter.com/o1B5CDNJOo
— Lokmat Times Nagpur (@LokmatTimes_ngp) April 25, 2025
புல்டோசர் மூலம் இடிப்பு
மேலும் காஷ்மீரைச் சேர்ந்த அடில் ஹுசேன் தோகர், ஆசிப் ஷேக் ஆகியோரும், 4 பாகிஸ்தானிய பயங்கரவாதிகளும் இதனை செய்ததாக தெரிய வந்தது. அவர்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பயங்கரவாதி அடில் உசேன் தோக்கரின் வீடு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி வெடிக்கச் செய்யப்பட்டது.
அதேபோல் மற்றொரு பயங்கரவாதி ஆசிப் ஷேக்கின் டிராலில் உள்ள வீடும் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |