பாபர் அஸாம் அரைசதம், 191 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்! அனல் பறக்கும் உலகக்கோப்பை
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.
எதிர்பார்ப்பு போட்டி
அகமதாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
Twitter (@TheRealPCB)
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷாஃபிக் 20 ஓட்டங்களிலும், இமாம் உல் ஹக் 36 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய ரிஸ்வான், பாபர் அஸாமுடன் சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பாபர் அஸாம் அரைசதம்
இந்த கூட்டணி 82 ஓட்டங்கள் குவித்தது. கடந்த போட்டிகளில் சொதப்பிய பாபர் அஸாம் இம்முறை அரைசதம் விளாசினார். ஆனால் சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.
பாபர் 58 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்ததாக அரைசதத்தை நோக்கி பயணித்த ரிஸ்வான் 49 ஓட்டங்களில் பும்ரா ஓவரில் போல்டு ஆனார்.
29th ODI fifty for Babar Azam ✨
— Pakistan Cricket (@TheRealPCB) October 14, 2023
Calm and composed innings from the captain ©️#INDvPAK | #DattKePakistani | #WeHaveWeWill pic.twitter.com/WO6KDpLGvB
191 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்
இதனால் பாகிஸ்தான் அணி திக்குமுக்காடியது. பின்னர் களமிறங்கிய ஷதாப் கான் 2 ஓட்டங்களில் பும்ரா ஓவரில் அவுட் ஆகி நடையை கட்டினார்.
அதனைத் தொடர்ந்து ஹர்திக், ஜடேஜாவின் மிரட்டலான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஹர்திக், ஜடேஜா, பும்ரா, குல்தீப் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Innings Break!
— BCCI (@BCCI) October 14, 2023
A cracker of a bowling performance from #TeamIndia! ? ?
Jasprit Bumrah, Kuldeep Yadav, Ravindra Jadeja, Hardik Pandya & Mohd. Siraj share the spoils with 2️⃣ wickets each!
Scorecard ▶️ https://t.co/H8cOEm3quc#CWC23 | #INDvPAK | #MeninBlue pic.twitter.com/omDQZnAbg7
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |