கேப்டனை மாற்றியும் மரணஅடி வாங்கிய பாகிஸ்தான்! 91 ரன்னில் சுருட்டி வென்ற நியூசிலாந்து அணி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
பாகிஸ்தான் 91க்கு ஆல்அவுட்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
18 ஓட்டங்கள் எடுத்த அணித்தலைவர் சல்மான் அஹா ஆட்டமிழக்க, குஷ்தில் ஷா 32 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, பாகிஸ்தான் அணி 18.4 ஓவரில் 91 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜேக்கப் டுஃபி 4 விக்கெட்டுகளும், ஜேமிசன் 3 விக்கெட்டுகளும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
புதிய கேப்டன் தலைமையில் தோல்வி
அதனைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 10.1 ஓவரிலேயே 92 ஓட்டங்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
டிம் செய்பெர்ட் (Tim Seifert) 44 (29) ஓட்டங்களும், ஃபின் ஆலன் 29 (17) ஓட்டங்களும் விளாசினர்.
பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக சல்மான் அஹா (Salman Agha) நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் படுதோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |