இலங்கை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்த இருவர்! 563 ஓட்டங்கள் குவிப்பு
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 563 ஓட்டங்கள் குவித்துள்ளது.
சுருண்ட இலங்கை
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 166 ஓட்டங்களில் சுருண்ட நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் இலங்கை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ஷான் மசூட் 51 ஓட்டங்களிலும், பாபர் அசாம் 39 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
AP
முதல் டெஸ்ட் இரட்டை சதம்
அடுத்து வந்த ஷகீல் 57 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். மறுமுனையில் மிரட்டிய ஷாஃபிக் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தினை பதிவு செய்தார்.
மொத்தம் 4 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 201 ஓட்டங்கள் குவித்த அவர் பிரபத் ஜெயசூரியா ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய அஹ்க சல்மான் சதம் விளாசினார்.
? First visiting opener to score a double ? at SSC, Colombo
— Pakistan Cricket (@TheRealPCB) July 26, 2023
? Third-youngest double-centurion for ?? after Javed Miandad and Hanif Mohammad@imabd28 scores a magnificent maiden double ton ?#SLvPAK pic.twitter.com/3zGaD0pnKl
3வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 563 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அஹ்க சல்மான் 132 ஓட்டங்களுடனும், முகமது ரிஸ்வான் 37 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
அஸிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும், பிரபத் ஜெயசூரியா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
AFP/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |