நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல்
நாங்கள் அழிந்தால், பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம் என பாகிஸ்தான் ராணுவ தளபதியின் கூற்றுக்கு இந்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுதப் போர் எச்சரிக்கை
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் விடுத்த அணு ஆயுத போர் மிரட்டல் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில், எதிர் காலத்தில் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், நாங்கள் ஒரு அணுசக்தி நாடு, எங்களுடன் சேர்த்து பாதி உலகையும் அழித்து விடுவோம் என எச்சரித்துள்ளார்.
பகல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 250 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதிப்படும் நிலை உள்ளது.
சிந்து நீர் வழித்தடத்தில் பாகிஸ்தானுக்கு சொந்தமான நீரை தடுத்து அணை கட்டினால், அவை கட்டி முடிக்கப்படும் வரை காத்திருந்து அதை 10 ஏவுகணைகள் கொண்டு அழிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் “எங்களிடம் ஏவுகணைகளுக்கு பஞ்சமில்லை, புகழ் கடவுகளுக்கு” என்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் எச்சரித்துள்ளார்.
இந்தியா கடும் கண்டனம்
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரின் இந்த அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலுக்கு இந்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
அதில் ராணுவ தளபதியின் கூற்று, பாகிஸ்தான் அணு ஆயுதங்களை கொண்ட பொறுப்பற்ற நாடு என்பது தெளிவாகிறது.
அமெரிக்கா பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எல்லாம், அவர்கள் தங்களின் உண்மையான நிறத்தை வெளிப்படுத்துகின்றனர்.
ராணுவ தளபதியின் கருத்து மூலம் பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் தனியார் நிறுவனங்களின் கைகளுக்கு செல்லும் அபாயம் இருப்பது போல் தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லை என்பதற்கு இது அறிகுறி என்றும் இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மண்ணில் இருந்து 3வது நாடொன்றுக்கு விடுக்கப்பட்ட முதல் அணு ஆயுத அச்சுறுத்தல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |