காஷ்மீர் ராஜஸ்தான் எல்லைகளில் இந்தியா பாகிஸ்தான் கடும் மோதல் - உச்சகட்ட பதற்றம்
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவின் 15 நகரங்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான S-400 சுதர்ஷன் சக்ரா, பாகிஸ்தானின் ஏவுகணைகளை வானிலே அழித்துள்ளது.
பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ரேடார்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம், அதனை செயலிழக்க செய்துள்ளது.
இந்தியா பதிலடி
இந்நிலையில், இன்று இரவு 9 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள விமான நிலையங்களை குறி வைத்து 8 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்களை பாகிஸ்தான் வீசியுள்ளது.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, இதனை வானிலே தடுத்தி நிறுத்தி அழித்து பதிலடி கொடுத்துள்ளது.
Jammu & Pathankot are under #DroneAttack !! With this move, Pakistan is signing its own death warrant.
— Himalayan Hindu (@himalayanhindu) May 8, 2025
S-400 doing it's work 🔥pic.twitter.com/J6tPW6SXNp
மேலும், ராஜஸ்தான் பகுதியிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானின் 3 விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக காஷ்மீர் பகுதியில் உச்சகட்டபதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காஷ்மீர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களை எச்சரிக்கை வகையில் சைரன் ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இந்தியா தனது போர் கப்பல்களை கராச்சி நோக்கி நகர்த்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |