விஸ்வரூபமெடுத்த பாகிஸ்தான் அணி! சொந்த மண்ணிலேயே தொடரை இழந்த அவுஸ்திரேலியா
பெர்த்தில் நடந்த ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
சுருண்ட அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
.@iShaheenAfridi gets on the board after the first blow by @iNaseemShah! 👊#AUSvPAK pic.twitter.com/fRz1n3eQR6
— Pakistan Cricket (@TheRealPCB) November 10, 2024
குறிப்பாக நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடியின் தாக்குதல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவுஸ்திரேலிய வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
Connolly ரிட்டையர் ஹர்ட் ஆனதால், அந்த அணி 31.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சியான் அப்போட் 30 (41) ஓட்டங்கள் எடுத்தார். ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளும், ஹாரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் வெற்றி
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷாபிக் 37 (53) ஓட்டங்களும், சைம் அயூப் 42 (52) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் 28 (30), ஓட்டங்களும், முகமது ரிஸ்வான் 30 (27) ஓட்டங்களும் எடுக்க, பாகிஸ்தான் அணி 26.5 ஓவரில் 143 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
class pic.twitter.com/vxYfWKeJk9
— cricket.com.au (@cricketcomau) November 10, 2024
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. தொடர் நாயகன் விருதை பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் பெற்றார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |