முதல் அணியாக உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய வங்கதேசம்! மரண அடி கொடுத்த இருவர்
உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
மஹ்முதுல்லா அரைசதம்
கொல்கத்தாவில் நடந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி தொடக்க வீரராக களமிறங்கிய தன்ஜிட் டக்அவுட் ஆக, அடுத்து வந்த ஷாண்டோ வேகப்பந்து வீச்சாளர் அஃப்ரிடி ஓவரில் வெளியேறினார்.
Twitter (@BCBtigers)
பின்னர் களமிறங்கிய ரஹீம் 5 ஓட்டங்களில் நடையை காட்டினார். அதன் பின்னர் லித்தன் தாஸ் மற்றும் மஹ்முதுல்லா இணை 100 ஓட்டங்களை அணி எட்ட உதவியது. 45 ஓட்டங்களில் இருந்த தாஸ் ஆட்டமிழக்க, கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில் அரைசதம் அடித்த மஹ்முதுல்லா 56 ஓட்டங்களில் அஃப்ரிடி ஓவரில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஷாகிப் 43 ஓட்டங்களில் அவுட் ஆக, கடைசி 3 விக்கெட்டுகளை வாசிம் மிரட்டலாக பந்து வீசி கைப்பற்றினார்.
Twitter (@BCBtigers)
இதனால் வங்கதேச அணி 45.1 ஓவரில் 204 ஓட்டங்களுக்கு சுருண்டது. அஃப்ரிடி மற்றும் வாசிம் தலா 3 விக்கெட்டுகளையும், ராஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Twitter (@TheRealPCB)
Twitter (@TheRealPCB)
பாகிஸ்தான் வெற்றி
அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷாபிக் மற்றும் பஹர் ஜமான் ருத்ர தாண்டவம் ஆடினர்.
ஷாபிக் 68 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மிராஸ் ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த கேப்டன் பாபர் அசாம் 9 ஓட்டங்களில் அவுட் ஆகி சொதப்பினார்.
Twitter (@TheRealPCB)
அடுத்து 81 (7 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) ஓட்டங்கள் எடுத்திருந்த ஜமான் ஆட்டமிழக்க, ரிஸ்வான் (26) மற்றும் இஃப்திகார் அகமது (17) போட்டியை முடித்து வைத்தனர். வங்கதேச அணியின் தரப்பில் மிராஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Twitter (@TheRealPCB)
மொத்தம் 7 போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம், அதில் 6யில் தோல்வியடைந்ததால் முதல் அணியாக உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |