மீண்டெழுந்த பாகிஸ்தான்! உலகக்கோப்பையில் முதல் வெற்றி
மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஷதாப் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்
49 ஓட்டங்கள் எடுத்த ரிஸ்வான் டி20 போட்டிகளில் 2500 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார்
பெர்த்தில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவிடம் போராடி தோற்ற பாகிஸ்தான் அணி, தனது அடுத்தப் போட்டியில் ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இந்த நிலையில் பெர்த்தில் இன்று நடந்த போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்டது பாகிஸ்தான். முதலில் ஆடிய நெதர்லாந்து அணி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சினால் ஓட்டங்களை எடுக்க திணறிய நெதர்லாந்து, ஆமை வேகத்தில் ஓட்டங்களை சேர்த்தது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 91 ஓட்டங்களே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளையும், முகமது வாசிம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Twitter (@ICC)
எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் பாபர் அசாம் 4 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த பஹர் ஜமான் அதிரடியாக 20 ஓட்டங்கள் எடுத்தார்.
Mohammad Rizwan completes 2️⃣5️⃣0️⃣0️⃣ runs in T20Is in his 65th innings ✅#WeHaveWeWill | #T20WorldCup | #NEDvPAK pic.twitter.com/ilHmZCxUDs
— Pakistan Cricket (@TheRealPCB) October 30, 2022
மறுமுனையில் நங்கூரம் போல் நின்று ஆடிய ரிஸ்வான் 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 95 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
Pakistan earn a six-wicket win over the Netherlands ?#WeHaveWeWill | #T20WorldCup | #NEDvPAK pic.twitter.com/wM2AQ2svVq
— Pakistan Cricket (@TheRealPCB) October 30, 2022