402 ரன்கள் இலக்கு! 200 மட்டுமே எடுத்து வெற்றி பெற்ற பாகிஸ்தான்
உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி DLS முறையில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
பெங்களுருவில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 401 ஓட்டங்கள் குவித்தது.
ரச்சின் ரவீந்திரா 108 ஓட்டங்களும், கேன் வில்லியம்சன் 95 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி அதிரடியில் மிரட்டியது.
ஷாபிக் 4 ஓட்டங்களில் அவுட் ஆன போதிலும் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஜமான் இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பஹர் ஜமான் 63 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
IANS
அணியின் ஸ்கோர் 25.3 ஓவர்களில் 200 ஆக இருந்தபோது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை தொடர்ந்ததால் DLS விதிமுறைபடி பாகிஸ்தான் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |