விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பாபர் அசாம்! வெற்றி வாகை சூடிய பாகிஸ்தான்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நசீம் ஷா 5 விக்கெட்
கராச்சியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 255 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரேஸ்வெல் 43 ஓட்டங்களும், லாதம் 42 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Back to back five-wicket hauls in ODIs ?
— ICC (@ICC) January 9, 2023
How good is Naseem Shah?#PAKvNZ pic.twitter.com/S2VyMSlYhV
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 11 ஓட்டங்களில் வெளியேறிய நிலையில், பஹ்கர் ஜமான் 56 ஓட்டங்கள் விளாசினார்.
பாபர் அசாம் பொறுப்பான ஆட்டம்
பின்னர் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானுடன் கைகோர்த்த கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
The skipper leading the way for Pakistan in the run chase ?#PAKvNZ | ? Scorecard: https://t.co/jGxyR7Qkgi pic.twitter.com/ol351jUVTo
— ICC (@ICC) January 9, 2023
அவர் தனது 23வது ஒருநாள் அரைசதத்தை எட்டினார். அணியின் ஸ்கோர் 168 ஆக இருந்தபோது, பிலிப்ஸ் ஓவரில் பாபர் அசாம் 66 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
முதல் வெற்றி
எனினும் நங்கூரமாக நின்று ஆடிய ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
Rizwan becomes the third Pakistan batter to get to a fifty today ?#PAKvNZ | ? Scorecard: https://t.co/jGxyR7Qkgi pic.twitter.com/bCaXlNmC8v
— ICC (@ICC) January 9, 2023
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் வெற்றியை பதிவு செய்து பாபர் அசாம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.