மிரட்டல் பந்துவீச்சில் சரிந்த விக்கெட்டுகள்.. 28வது அரைசதம் விளாசிய பாபர் அசாம்
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு இது 28வது டி20 அரைசதம் ஆகும்
வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப் 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கிரிஸ்ட்சர்ச்சில் நடந்து வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி மிதமான வேகத்தில் ஓட்டங்களை சேர்ந்தது.
கான்வே 36 ஓட்டங்களும், வில்லியம்சன் 31 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களை பாகிஸ்தானின் ராஃப், முகமது வாசிம், நவாஸ் ஆகியோர் வெளியேற்றினர்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சாப்மேன் 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மசூட் ஓட்டங்கள் எடுக்காமல் அவுட் ஆனார். எனினும் கேப்டன் பாபர் அசாம் அதிரடியில் மிரட்டினார்.
Twitter (@TheRealPCB)
பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பாபர் அசாம் 79 ஓட்டங்களும், ஷதாப் கான் 34 ஓட்டங்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிக்னர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.