தனது 100வது டி20 போட்டியில் மிரட்டலான வெற்றியை பெற்ற கேப்டன்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் டி20 போட்டி
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லாகூரில் நேற்று நடந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது 100வது டி20யில் களமிறங்கினார்.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 182 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பஹர் ஜமான் 34 பந்துகளில் 47 ஓட்டங்களும், சைம் அயூப் 28 பந்துகளில் 47 ஓட்டங்களும் எடுத்தனர்.
@BLACKCAPS (Twitter)
ஹென்றி ஹாட்ரிக் விக்கெட்
நியூசிலாந்து தரப்பில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஹென்றி 3 விக்கெட்டுகளையும், மில்னே மற்றும் லிஸ்டர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஹரிஸ் ராஃப் மிரட்டலாக பந்துவீசி நியூசிலாந்தை திணறடித்தார். மார்க் சாப்மேன் 34 ஓட்டங்கள் எடுக்க, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
@TheRealPCB (Twitter)
சுருண்ட நியூசிலாந்து
நியூசிலாந்து 15.3 ஓவர்களில் 94 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் பாகிஸ்தான் 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹரிஸ் ராஃப் 4 விக்கெட்டுகளும், இமாத் வசிம் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
@TheRealPCB (Twitter)
ஹரிஸ் ராஃப் ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது.
@TheRealPCB (Twitter)