அரைசதத்துடன் 2 விக்கெட் வீழ்த்தி மிரட்டிய ஷதாப் கான்! தென் ஆப்பிரிக்காவை தட்டித்தூக்கிய பாகிஸ்தான்
அரைசதம் மற்றும் 2 விக்கெட் வீழ்த்திய ஷதாப் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்று வாய்ப்பினை தக்க வைத்துள்ளது
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிட்னியில் நடந்த இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது. தொடக்க வீரர்களான ரிஸ்வான், பாபர் அசாம் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
முகமது ஹரிஸ் அதிரடியாக 28 (11) ஓட்டங்கள் விளாசினார். மசூட் 2 ஓட்டங்களில் வெளியேற, நவாஸ் தனது பங்குக்கு 28 ஓட்டங்கள் எடுத்தார். ஆறாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த இஃப்திகார் அகமது - ஷதாப் கான் ஜோடி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.
குறிப்பாக ஷதாப் கான் ருத்ர தாண்டவம் ஆடினார். இஃப்திகார் 51 (35) ஓட்டங்களும், ஷதாப் கான் 52 (22) ஓட்டங்களும் விளாச, பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோர்ட்ஜெ 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி மிரட்டினார்.
Pakistan have set South Africa a target of 186 ?
— ICC (@ICC) November 3, 2022
Who is winning this?#T20WorldCup | #PAKvSA | ?: https://t.co/3VVq7VAJLt pic.twitter.com/PvlMFpFIUA
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் பவுமா தவிர யாரும் ஓட்டங்களை குவிக்கவில்லை. இதனால் அந்த அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தென் ஆப்பிரிக்கா 69 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
இதன் காரணமாக 14 ஓவரில் 142 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 108 ஓட்டங்களே எடுக்க முடிந்ததால், பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Making early inroads ☝️
— ICC (@ICC) November 3, 2022
Pakistan are #InItToWinIt ? @royalstaglil | #T20WorldCup pic.twitter.com/f06lvRc4mn
தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா 19 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
South Africa are rebuilding after losing two early wickets in the Powerplay ?#T20WorldCup | #PAKvSA | ?: https://t.co/3VVq7VAJLt pic.twitter.com/vIWmjJxSwg
— ICC (@ICC) November 3, 2022
52 off 22 ?
— ICC (@ICC) November 3, 2022
2/16 ?
A sensational all-round performance from Shadab Khan fetches him the @aramco POTM award ? pic.twitter.com/qOKN0KFjCt