ஒற்றை வீரரின் சுழலில் 123 ஓட்டங்களுக்கு சுருண்ட மே.தீவுகள்! பாகிஸ்தான் அணி அபார வெற்றி
முல்தான் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 127 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.
ஷகீல் 84
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்தது.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 230 ஓட்டங்கள் எடுத்தது. ஷகீல் 84 ஓட்டங்களும், ரிஸ்வான் 71 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஜேடன் சீல்ஸ் மற்றும் வாரிகன் தலா 3 விக்கெட்டுகளும், சின்கிளைர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய தீவுகள் 137 ஓட்டங்களுக்கு சுருண்டது. நோமன் அலி 5 விக்கெட்டுகளும், சஜித் கான் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் ஜோமெல் வாரிகனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 157 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 251 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் தோல்வி
அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சஜித் கானின் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அலிக் அதனசி அதிரடியாக ஓட்டங்களை எடுத்தார்.
வெற்றிக்காக அவர் போராடினாலும், அப்ரர் அஹ்மது பந்துவீச்சில் ஏனைய வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 55 ஓட்டங்கள் எடுத்த அதனசி 9வது விக்கெட்டாக வெளியேற, மேற்கிந்திய தீவுகள் அணி 123 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 127 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சஜித் கான் 5 விக்கெட்டுகளும், அப்ரர் அஹ்மது 4 விக்கெட்டுகளும், நோமன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |