பாகிஸ்தானின் உலகக்கோப்பை கனவை சிதைத்த இங்கிலாந்து! 8 விக்கெட் வித்தியாசத்தில் மாஸான வெற்றி
உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
ஸ்டோக்ஸ் அதிரடி
ஈடன் கார்டனில் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய மலான் 31 ஓட்டங்களும், பேர்ஸ்டோவ் 59 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆகினர். பின்னர் வந்த ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Twitter (@englandcricket)
அரைசதம் அடித்த ஸ்டோக்ஸ் 84 (76) ஓட்டங்களில் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து 60 ஓட்டங்கள் எடுத்த ரூட் ஆட்டமிழக்க, புரூக் 30 (17) ஓட்டங்களும், பட்லர் 27 (18) ஓட்டங்களும் விளாச இங்கிலாந்து அணி 337 ஓட்டங்கள் குவித்தது. ஹரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளும், ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் வாசிம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Twitter (@TheRealPcb)
தகர்ந்த பாகிஸ்தானின் கனவு
இங்கிலாந்து அணி பாரிய இலக்கை நிர்ணயித்ததனாலேயே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது. எனினும் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
டேவிட் வில்லி தொடக்க வீரர்களை அவுட் செய்து ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த கேப்டன் பாபர் அசாம் 38 ஓட்டங்களும், ரிஸ்வான் 36 ஓட்டங்களும், ஷகீல் 29 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
எனினும் அஹா சல்மான் வெற்றிக்காக போராடினார். அரைசதம் அடித்த அவர் 51 ஓட்டங்களில் வில்லி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அஃப்ரிடி 25 ஓட்டங்களும், ராஃப் 35 ஓட்டங்களும் விளாசினர். ஆனாலும், 43.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 244 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
Twitter (@englandcricket)
இங்கிலாந்து தரப்பில் வில்லி 3 விக்கெட்டுகளும், அடில் ரஷீத், அட்கின்சன் மற்றும் மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தகுதியை தக்க வைத்தது.
Twitter (@englandcricket)
ஆனால் பாகிஸ்தானின் உலகக்கோப்பை கனவு தகர்ந்ததால், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
Twitter (@englandcricket)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |