விரைவில் குணம்பெற்று வாருங்கள்..எதிரணி கேப்டனுக்காக மைதானத்தில் பதாகை ஏந்திய பாகிஸ்தான் ரசிகர்
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விரைவில் குணம்பெற்று வர வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர் பதாகை ஏந்திய சுவாரசிய நிகழ்வு நேற்று நடந்தது.
பாகிஸ்தான் வெற்றி
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லாகூரில் நடந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக தொடரில் பங்கேற்காததால், அணியின் கேப்டனாக டாம் லாதம் செயல்பட்டார்.
Quality batting ✅
— Pakistan Cricket (@TheRealPCB) April 14, 2023
Fantastic bowling display ✅
Emphatic 88-run victory achieved in the first T20I ? #PAKvNZ | #CricketMubarak pic.twitter.com/OaPBUlOHBL
பாகிஸ்தான் அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டியின்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கேன் வில்லியம்சனின் புகைப்படம் அடங்கிய பதாகையை ஏந்தி நின்றார்.
நெகிழ்ச்சி தருணம்
அதில் Get Well Soon Williamson என எழுதப்பட்டிருந்தது. கேன் வில்லியம்சன் அவர் நாட்டின் ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களாலும் விரும்பப்படும் நபராக உள்ளார்.
@TheRealPCB (Twitter)
அதற்கு உதாரணமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.