பிரபல பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், அவை முற்றிலுமாக ஒழிக்கப்படாமல் தொடர்ந்து ஆங்காங்கே பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கவுள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப்புக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவரால் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது.ஏற்கெனவே வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப் ஆகியோர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹாரிஸ் ரவுப் கொரோனாவால் விலகியிருப்பது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.