டி20 உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் முதல் வெற்றி! மோசமான சாதனை படைத்த வீரர்
கனடாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆரோன் ஜான்சன் 52
நியூயார்க்கில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி கனடாவை எதிர்கொண்டது. முதலில் துடுப்பாடிய கனடா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆரோன் ஜான்சன் 52 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர் சைம் அயூப் 6 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த அணித்தலைவர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
A disciplined bowling performance restricts Canada to 106-7 ?
— Pakistan Cricket (@TheRealPCB) June 11, 2024
1️⃣0️⃣7️⃣ to chase for victory in New York ?#PAKvCAN | #T20WorldCup | #WeHaveWeWill pic.twitter.com/sSa2gYAPW1
மறுமுனையில் மொஹம்மது ரிஸ்வானும் பொறுப்பாக ஆடினார். இந்தக் கூட்டணி 64 பந்துகளில் 63 ஓட்டங்கள் குவித்தது.
பாபர் அசாம் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹேலிகேர் ஓவரில் ஆட்டமிழந்தார். எனினும் அரைசதம் விளாசிய ரிஸ்வான் 18வது ஓவரிலேயே அணியை வெற்றி பெற வைத்தார்.
ரிஸ்வான் 53
53 பந்துகளை எதிர்கொண்ட ரிஸ்வான் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் எடுத்தார். நடப்பு டி20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியின் முதல் வெற்றி இதுவாகும்.
A calm and composed knock by Rizwan to bring up his 29th T20I fifty ?#PAKvCAN | #T20WorldCup | #WeHaveWeWill pic.twitter.com/0qHB7cneHc
— Pakistan Cricket (@TheRealPCB) June 11, 2024
மொஹம்மது ரிஸ்வான் 52 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம், டி20 உலகக்கிண்ண வரலாற்றில் அரைசதம் அடிக்க அதிக பந்துகளை எடுத்துக் கொண்ட முதல் வீரர் என்ற மோசமான சாதனையை செய்தார்.
இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 50 பந்துகளில் (நெதர்லாந்துக்கு எதிராக, 2024) அரைசதம் எட்டியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |