ஹர்திக் பாண்டியாவுக்காக குரல் கொடுக்கும் பாகிஸ்தான் வீரர்..பிசிசிஐயிடம் கேள்வி
இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்காதது ஏன் பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ரஷித் லத்தீப் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக கேள்வி
ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டது முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதேபோல் கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு விளக்கம் கொடுத்த தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்த்திக்கின் உடற்தகுதி கவலைகளை சுட்டிக் காட்டினார். அதன் காரணமாகவே விட சூர்யகுமார் யாதவை பிசிசிஐ கேப்டனாக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
ரஷித் லத்தீப் ஆதரவு
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் (Rashid Latif) பிசிசிஐயை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக பேசியுள்ள அவர் கூறுகையில், ''அவருக்கு உடற்தகுதி இல்லை என்று கூறுவது ஒரு சாக்கு. இதற்கு பேசாமல் அவர்கள் பாண்டியா சரியான உடற்தகுதியுடன் இல்லை என்ற சான்றிதழை கொடுக்கலாம்.
இங்கே Fitness இல்லாமலேயே பல வீரர்கள் விளையாடி மிகச்சிறந்த கேப்டனாக சாதனை படைத்துள்ளனர். சூர்யகுமார் இல்லை என்றால் நீங்கள் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும் என்ற நிலையில் ரிஷாப் பண்ட் கேப்டனாக இருந்திருப்பார்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |