ஜடேஜா ஒரு பரிதாபகரமான ஸ்பின்னர், இவர்தான் பயங்கரமான பந்துவீச்சாளர்! பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்
இந்திய அணியில் சஹால் பயங்கரமான வீரர் என்றும், ரவீந்திர ஜடேஜா பரிதாபகரமான பந்துவீச்சாளர் என்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துர் ரெஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அப்துர் ரெஹ்மான், நேர்காணல் ஒன்றில் இந்திய பந்துவீச்சாளர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை விட பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்தவர்கள். ஷதாப் கான் மற்றும் முகமது நவாஸ் உண்மையில் நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள். இமாத் வாசிம் மற்றும் யாசிர் ஷா கூட இங்கு உள்ளனர்.
@icc-cricket
இந்திய அணியில் யுஸ்வேந்திர சஹால் பயங்கரமான சுழற்பந்து வீச்சாளர். ஆனால் ரவீந்திர ஜடேஜா பரிதாபகரமான சுழற்பந்து வீச்சாளர்' என தெரிவித்துள்ளார்.
@Themba Hadebe/Associated Press
பந்துவீச்சில் மிரட்டும் ஜடேஜா
சமீபத்தில் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜடேஜா, ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை சாய்த்தார்.
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, இருமுறை ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஆனால் அவரது பந்துவீச்சை தான் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.