இங்கிலாந்துக்கு தரமான பதிலடி கொடுத்த பாகிஸ்தான்! தொடக்க வீரர்கள் மிரட்டல் சதம் விளாசல்
ராவல்பிண்டியில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி வீரர்கள் அப்துல்லா ஷாஃபீக் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் சதம் அடித்துள்ளனர்.
இங்கிலாந்து 657
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 657 ஓட்டங்கள் குவித்தது. நான்கு வீரர்கள் சதம் விளாசினர்.
பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபீக், இமாம் உல் ஹக் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
@AFP
இதன்மூலம் பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 181 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
மிரட்டிய தொடக்க வீரர்கள்
இந்த நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. அரைசதம் கடந்திருந்த அப்துல்லா ஷாஃபீக், டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது சதத்தை எட்டினார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக்-வும் சதமடித்தார். இது அவருக்கு மூன்றாவது டெஸ்ட் சதம் ஆகும். இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 225 ஓட்டங்கள் குவித்த நிலையில், வில் ஜேக்ஸ் முற்றுப்புள்ளி வைத்தார்.
@Getty Images
அவரது பந்துவீச்சில் ஷாஃபீக் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 114 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸிற்கு இது முதல் சர்வதேச டெஸ்ட் விக்கெட் ஆகும்.
@AFP
@TheRealPCB