பரபரப்பான கட்டத்தில் பறந்து வந்து ரன்அவுட்! மிரட்டலான வெற்றி.. ஆர்ப்பரிப்பில் அதிர்ந்த மைதானம்
நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி 2-2 என தொடரை சமன் செய்துள்ளது
மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹரிஸ் ராஃப் ஆட்டநாயகன் விருதை பெற்றார்
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. கராச்சியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது. ரிஸ்வான் 67 பந்துகளில் 88 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் டக்கெட் 33 ஓட்டங்களும், ப்ரூக் 34 ஓட்டங்களும் எடுத்தனர். கேப்டன் மொயீன் அலி 29 ஓட்டங்களும், லியாம் டவ்சன் 34 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 5 பந்துகளில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
An extraordinary finale in Karachi - Pakistan win a classic!
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 25, 2022
(via @TheRealPCB) #PAKvENG pic.twitter.com/ML9We8kXpY
அப்போது வாசிம் வீசிய பந்தை டாப்லே அடித்துவிட்டு ரன் ஓட முயற்சிக்க, பாகிஸ்தான் வீரர் மசூட் பாய்ந்து வந்து நேரடியாக ஸ்டம்பை நோக்கி எறிந்து ரன் அவுட் செய்தார்.
கடைசி விக்கெட்டான டாப்லே ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. ரன் அவுட் செய்யப்பட்ட கணம் கராச்சி மைதானமே ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் அதிர்ந்தது.
Twitter