பஞ்சாப்பில் ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்? - இடைமறித்த இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு
பஞ்சாப்பில் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதலை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு இடைமறித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் பகுதிகளில், உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரீப் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடத்திய தாக்குதலில், 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எல்லை பகுதிகளில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
மேலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் தர்மசாலா விமான நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநில எல்லையில், பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப்பில் ஏவுகணை தாக்குதல்?
சர்வதேச எல்லையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜேதுவால் கிராமத்தை நோக்கிச் அதிகாலை 1:05 மணியளவில் ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
Missiles seen in Jalandhar Punjab. 💥
— Raman Verma (@RamanVerma53113) May 7, 2025
Video captured by Lpu hostels student. 🔥🔥
Amritsar mei dikhi missiles... #sialkot #operation_sindoor#amritsar #jalandhar #lpu @ajeetbharti @aajtak @randomsena @desimojito @JaipurDialogues @BhaiiSamrat @HPhobiaWatch pic.twitter.com/W2mhSSdxFy
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள், இந்த ஏவுகணைகளை இடைமறித்து செயலிழக்கச் செய்துள்ளன.
இந்த இடைமறிப்புக்குப் பின்னர், பஞ்சாபின் சில பகுதிகளில் சிறிது நேரம் மின்சாரம் தடைப்பட்டது, அழிக்கப்பட்ட இந்த ஏவுகணையின் உதிரி பாகங்கள், இன்று காலை பஞ்சாபின் அமிர்தசரஸ் - பட்டாலா சாலையில் ஜெதுவால் கிராமம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய பிஎல்- 15இ ஏவுகணை எனவும், பாகிஸ்தானின் ஜே-10சி போர் விமானம் மூலமாக ஏவப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏவுகணைகளின் தோற்றம் மற்றும் தன்மை குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் உயிரிழப்பு அல்லது உள்கட்டமைப்பு சேதம் குறித்த எந்த தகவலும் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |