ரசிகர் சொன்ன வார்த்தை..பாய்ந்து வந்து அடித்த பாகிஸ்தான் வீரர்..சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ
தன்னை குறை சொன்ன ரசிகர்களை பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி பாய்ந்து வந்து அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தவறவிட்ட கேட்ச்
பாகிஸ்தான் அணி 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியடைந்து வெளியேறியது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி கேட்ச் தவறவிட்டதால் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர்.
Hassan Ali's fight with the crowd?#HassanAli #PakvEng #Cricket pic.twitter.com/G4mji06uwa
— Muhammad Noman (@nomanedits) December 3, 2022
வம்பிழுந்த ரசிகர்கள்
இந்த நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டியில் ஹசன் அலி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பவுண்டரி எல்லையில் இருந்த ரசிகர்கள், டி20 உலகக்கோப்பையில் அவுஸ்திரேலியாவின் மேத்யூ வேட் கேட்சை ஹசன் அலி தவறவிட்டதை குறிப்பிட்டு மீண்டும் கிண்டல் செய்தனர்.
இதனால் கோபமடைந்த ஹசன் அலி போட்டி முடிந்ததும் நேரடியாக பார்வையாளர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து ரசிகரை தாக்கினார். அங்கிருந்த பாதுகாவலர்கள் ஹசன் அலியை விலக்கி அங்கிருந்து அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
@File Photo/ Getty Images