தலையிலேயே பலத்த காயம்! பாகிஸ்தான் அணிக்கு விழுந்த பெரிய அடி
பயிற்சியின்போது பலத்த அடிபட்டதால் பாகிஸ்தான் வீரர் மசூட் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது
நடுகள வரிசையில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படும் வீரராக ஷான் மசூட் இருக்கிறார்
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் மசூட்டின் தலையில் அடிபட்டதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உலகளவில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் மாதம் 23ஆம் திகதி நடக்க உள்ளது.
இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் அவுஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது முகமது நவாஸ் ஒரு பந்தை வேகமாக அடிக்க முயன்று, அது அருகில் இருந்த ஷான் மசூட்டின் தலையில் பலமாக பட்டது.
இதில் அதே இடத்தில் மசூட் சுருண்டு விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதனால் மசூட் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக ஃபகர் ஜமான் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது.