176 ஓட்டங்கள் விளாசல்! இமாலய சாதனை படைத்த வீராங்கனை
சிட்ரா அமீனுக்கு இது 3வது ஒருநாள் சதம் ஆகும்
ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஜாவேரியா கானின் (133) சாதனையை சிட்ரா அமீன் (221) முறியடித்துள்ளார்
பாகிஸ்தான் வீராங்கனை அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 176 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
லாகூரில் பாகிஸ்தான் - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி நடந்தது. முதலில் பாகிஸ்தான் அணியில் சிட்ரா அமீன் மற்றும் முனீபா அலி இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.
இவர்களது கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 221 ஓட்டங்கள் குவித்தது. முனீபா அலி 107 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், சிட்ரா அமீன் தொடர்ந்து அதிரடி காட்டினார்.
A truly special innings from @SidraAmin31 ✨
— Pakistan Cricket (@TheRealPCB) November 4, 2022
5️⃣th highest individual score in Women's ODIs ?#PAKWvIREW | #BackOurGirls pic.twitter.com/SkueoJw9tL
இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய சிட்ரா அமீன் 151 பந்துகளில் 176 ஓட்டங்கள் விளாசினார். இதில் ஒரு சிக்ஸர், 20 பவுண்டரிகள் அடங்கும். இந்த சதத்தின் மூலம் அவர் பல சாதனைகளை படைத்தார். மகளிர் ஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 49.3 ஓவரில் 207 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
All class from @SidraAmin31 ?
— Pakistan Cricket (@TheRealPCB) November 4, 2022
Watch Live ➡️ https://t.co/XN68eRCOxr#PAKWvIREW | #BackOurGirls pic.twitter.com/NrsojsuM7I
சிட்ரா - முனீபா குவித்த 221 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப், பாகிஸ்தான் அணியில் தொடக்க ஜோடி அடித்த அதிக ஸ்கோர் ஆகும்.