நடுவரை பந்தால் தாக்கிய வீரர்! கோபத்தில் அவர் செய்த செயல்..வீடியோ
நியூசிலாந்து எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் எறிந்த பந்து நடுவரை தாக்கியதால், அவர் கோபத்தில் சீருடையை வீசினார்.
இரண்டாவது ஒருநாள்
போட்டி பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முகமது வாசிம், தன்னிடம் வந்த பந்தை எடுத்து ஸ்டம்ப்பை நோக்கி எறிந்தார்.
Straight to Aleem Dar's ankle. pic.twitter.com/Vht8dvF5mA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 11, 2023
நடுவரை தாக்கிய பந்து
ஆனால் அந்த பந்து நேரடியாக நடுவரை தாக்கியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் கோபத்தில் கையில் வைத்திருந்த வீரரின் சீருடையை கீழே போட்டுவிட்டு ஏதோ கூறினார்.
உடனே அவரது அருகில் வந்த பாகிஸ்தான் வீரர் நடுவரை சமாதானப்படுத்தினர். வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அடிபட்ட நடுவரின் காலை தேய்த்துவிட்டார்.
இந்த நிகழ்வினால் மைதானத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.