இலங்கைக்கு எதிரான முதல் வெற்றி: கேக் வெட்டி கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்களின் வீடியோ
காலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதை, பாகிஸ்தான் அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. கடைசி நாள் வரை சென்ற இந்த போட்டி, 5வது நாளில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்ததால் பரபரப்பான கட்டத்தை எட்டியது.
எனினும், தொடக்க வீரராக களமிறங்கி முதல் சதம் அடித்த ஷாபிக் களத்தில் நின்றதால் பாகிஸ்தான் அணி நம்பிக்கையை கைவிடவில்லை. அந்த அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்களே தேவை என்ற நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
இதனால் பாகிஸ்தான் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுவிடுமோ என அச்சமுற்றனர். அப்போது தான் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ஷ்ட காற்று வீசியது.
சிறுது நேரத்தில் ஆட்டம் தொடங்கியதால் மீதமுள்ள ஓட்டங்களை எடுத்து அந்த அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 160 ஓட்டங்கள் எடுத்த ஷாபிக் பாகிஸ்தான் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தார்.
Win together. Celebrate together. ?
— Pakistan Cricket (@TheRealPCB) July 20, 2022
Cake time for the boys ??#SLvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/b5l3Pe5u4E
எனவே இந்த வெற்றியை கொண்டாடும்போது அவரை கேக் வெட்டுமாறு சக வீரர்கள் கூறினர். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோவை பாகிஸ்தான் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.