கனடாவில் லொறி ஏற்றி முஸ்லிம் குடும்பம் படுகொலை! கொந்தளித்த பாகிஸ்தான் பிரதமர்
கனடாவில் லொறி ஏற்றி முஸ்லிம் குடும்பம் படுகொலை செய்யப்பட்டதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக கண்டித்துள்ளார்.
ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் ஒரே முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு 74 வயது பாட்டி, 46 வயது கணவர், 44 வயது மனைவி, அவர்களது மகளான 15 வயது பெண் ஆகியோர் லொறி ஏற்றி கொல்லப்பட்டனர்.
லொறியை ஓட்டிய Nathaniel Veltman என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இஸ்லாமிய எதிர்ப்பு குழுக்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முஸ்லிம் குடும்பம் படுகொலை செய்யப்பட்டதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டதாவது, ஒன்ராறியோவின் லண்டனில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய முஸ்லிம் குடும்பம் கொல்லப்பட்டதை தகவலறிந்து வருத்தமடைந்தேன்.
பயங்கரவாதத்தின் இந்த கண்டிக்கத்தக்க செயல் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வரும் இஸ்லாமிய எதிர்ப்பு அலையை வெளிப்படுத்துகிறது.
Saddened to learn of the killing of a Muslim Pakistani-origin Canadian family in London, Ontario. This condemnable act of terrorism reveals the growing Islamophobia in Western countries. Islamophonia needs to be countered holistically by the international community.
— Imran Khan (@ImranKhanPTI) June 8, 2021
இஸ்லாமிய எதிர்ப்பு அலையை (Islamophonia) சர்வதேச சமூகம் முழுமையாய் எதிர்கொள்ள வேண்டும் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்