டி20 உலகக்கிண்ணம்: அமெரிக்காவுக்கு 160 ரன் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
டி20 உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 160 ஓட்டங்கள் வெற்றி இலக்கினை அமெரிக்காவுக்கு நிர்ணயித்தது.
டல்லாஸில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.
ரிஸ்வான் (9), உஸ்மான் கான் (3), பஹர் ஜமான் (11) சொதப்பிய நிலையில், பாபர் அசாம் 43 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்தார்.
At the end of 1️⃣0️⃣ overs, Pakistan are 66-3 with Babar and Shadab batting in the middle 🏏#USAvPAK | #T20WorldCup | #WeHaveWeWill pic.twitter.com/3c69RrTSf5
— Pakistan Cricket (@TheRealPCB) June 6, 2024
அதிரடி காட்டிய ஷதாப் கான் 25 பந்தில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 40 ஓட்டங்களும், ஷஹீன் அஃப்ரிடி 16 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 23 ஓட்டங்களும் விளாசினர்.
அமெரிக்க அணியின் தரப்பில் நோஷ்துஷ் கெஞ்சிகே 3 விக்கெட்டுகளும், நேட்ரவால்கர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்க அணி 10 ஓவரில் 76 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
.@76Shadabkhan and @babarazam258's crucial 72-run stand followed by @iShaheenAfridi's cameo leads Pakistan to 159-7 🏏
— Pakistan Cricket (@TheRealPCB) June 6, 2024
The USA innings will commence shortly.#T20WorldCup | #USAvPAK | #WeHaveWeWill pic.twitter.com/PnQ8lk3eJp
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |