இறுதிப் போட்டிக்குள் நுழைய இலங்கை அணிக்கு 252 ஓட்டங்கள் இலக்கு! மிரட்டிய பாகிஸ்தான் வீரர்
கொழும்பில் நடந்து வரும் போட்டியில் பாகிஸ்தான் அணி 252 ஓட்டங்கள் (DLS முறைப்படி) வெற்றி இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
அப்துல்லா ஷாஃபிக் அரைசதம்
ஆசியக்கோப்பையின் இறுதிப் போட்டிக்குள், இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Twitter (@TheRealPCB)
கொழும்பில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இலங்கையின் பிரமோத் மதுஷன் பாகிஸ்தான் தொடக்க வீரர் பஹ்கர் ஜமானை 4 ஓட்டங்களில் வெளியேற்றினார்.
அதன் பின்னர் கேப்டன் பாபர் அசாம் 29 ஓட்டங்களில் வெல்லாலகே பந்துவீச்சில் அவுட் ஆனார். நிலைத்து நின்று ஆடிய மற்றொரு தொடக்க வீரரான அப்துல்லா ஷாஃபிக் 52 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ரிஸ்வான் அதிரடி ஆட்டம்
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மொஹம்மது ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 130-5 ஆக இருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
மழை நின்ற பின் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 252 ஓட்டங்கள் குவித்தது.
ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 86 (73) ஓட்டங்களும், இஃப்திகார் அகமது 47 (40) ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கையின் தரப்பில் பத்திரனா 3 விக்கெட்டுகளும், மதுஷன் 2 விக்கெட்டுகளும், தீக்ஷணா மற்றும் வெல்லாலகே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Twitter (@TheRealPCB)
Sri Lanka need 252 runs off 252 balls. (Revised by DLS)#AsiaCup2023 #SLvPAK pic.twitter.com/JdziKnmTfT
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) September 14, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |