மகளிர் உலகக்கிண்ணத் தொடக்க விழாவில் பாகிஸ்தான் இல்லை! இந்தியாவில் நடப்பதால் விலகுவதாக தகவல்
இந்தியாவில் மகளிர் உலகக்கிண்ணத் தொடக்க விழா நடப்பதால் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.
தொடக்க விழா
ஐசிசி மகளிர் உலகக்கிண்ணத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க உள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் செப்டம்பர் 30ஆம் திகதி இதன் தொடக்க விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்றும், இந்தியாவில் நடைபெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கொழும்பில் மோதல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 5ஆம் திகதி இலங்கையின் கொழும்பில் நடைபெறும் போட்டியில் மோதுகின்றன.
முன்னதாக ஆடவர் அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கு இரண்டு நாடுகளின் அணி நிர்வாகங்களும் ஒன்றையொன்று எதிர்த்து வந்தன.
இந்த நிலையில் மகளிர் உலகக் கிண்ணத் தொடரிலும் பிரச்சனைகள் எழுந்துள்ளதாக பேசப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |