மழையால் ஆறுதல் வெற்றிகூட இல்லாமல் வெளியேற்றம்! தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிக்கு வந்த சோதனை
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராஃபி
ராவல்பிண்டியில் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் 9வது போட்டி இன்று நடைபெற இருந்தது.
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோத இருந்தன. ஆனால் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
நீண்ட நேரம் மழையால் ஆட்டம் தடைப்பட்டதால் நாணய சுழற்சி இல்லாமல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ரசிகர்கள் ஏமாற்றம்
இதனால் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணிக்கு ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. இது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் 60 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |