ஒற்றை ஆளாய் புரட்டியெடுத்த ஷதாப்கான்! ஆறு போட்டிகளில் வென்று மேற்கிந்தியதீவுகளை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி முல்தானில் நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஜமான் 35 ஓட்டங்களும், இமாம் உல் ஹக் 62 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து பூரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்த நிலையில், மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல் ரவுண்டர் ஷதாப் கான் 78 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் விளாசினார்.
.@76Shadabkhan punished everything in his arc! ?#PAKvWI | #KhelAbhiBaqiHai pic.twitter.com/vSryWobriI
— Pakistan Cricket (@TheRealPCB) June 12, 2022
Photo Credit: Twitter (@TheRealPCB)
புழுதி காற்று வலுவாக வீசியதால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. அதன் காரணமாக ஒரு இன்னிங்சிற்கு 2 ஓவர்கள் வீதம் குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 48 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஷதாப் கானின் சூழலில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை கைப்பற்றினர். துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளித்த நிலையில், சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹூசேன் 37 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் எடுத்து மிரட்டினார்.
The skill and guile of @76Shadabkhan ?@iamharis63 is lightning quick behind the stumps ⚡⚡#PAKvWI | #KhelAbhiBaqiHai pic.twitter.com/BU3dQvnatJ
— Pakistan Cricket (@TheRealPCB) June 12, 2022
Photo Credit: Twitter (@TheRealPCB)
இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 37.2 ஓவரில் 216 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷதாப் கான் 4 விக்கெட்டுகளையும், ஹசன் அலி மற்றும் முகமது நவாஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஷதாப் கானும், தொடர் நாயகன் விருதை இமாம் உல் ஹக்கும் வென்றனர்.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணியை வாஷ்அவுட் செய்தது. முன்னதாக டி20 தொடரையும் 3-0 என கைப்பற்றி பாகிஸ்தான் அணி வாஷ்அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: Twitter (@TheRealPCB)
Photo Credit: Twitter (@TheRealPCB)