இலங்கை அணியின் வெற்றியை தட்டிப்பறித்த 22 வயது வீரர்! இறுதிவரை போராடிய பிரபத் ஜெயசூரியா
காலே டெஸ்டில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இலங்கை 222 ஓட்டங்களும், பாகிஸ்தான் 218 ஓட்டங்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 337 ஓட்டங்கள் குவிக்க, பாகிஸ்தான் அணிக்கு 342 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை வீரர் பிரபத் ஜெயசூரியா, இரண்டாவது இன்னிங்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷாபிக் இலங்கைக்கு தலைவலி கொடுத்தார்.
PC: Twitter (@TheRealPCB)
22 வயதான ஷாபிக் தனது முதல் சர்வதேச சதத்தினை பதிவு செய்தார். பாபர் அசாம் 55 ஓட்டங்களும், ரிஸ்வான் 40 ஓட்டங்களும் எடுத்து பிரபத் ஜெயசூரியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
PC: Twitter (@TheRealPCB)
அதன் பின்னர் வந்த அக்ஹ சல்மான், ஹசன் அலி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, மறுமுனையில் ஷாபிக் 150 ஓட்டங்களை கடந்தார். அவருக்கு உறுதுணையாக முகமது நிவாஸ் விளையாட, பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 344 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
PC: Twitter (@TheRealPCB)
கடைசி வரை களத்தில் நின்ற ஷாபிக் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 160 ஓட்டங்கள் விளாசினார். ஆட்டநாயகன் விருதையும் அவரே தட்டிச் சென்றார்.
இலங்கை அணி தரப்பில் பிரபத் ஜெயசூரியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தமாக அவர் இந்த டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
crictelegraph
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.