இமாலய சாதனை படைத்த கேப்டன்! டி20 தொடரில் ஆறுதல் வெற்றி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
கடைசி டி20 போட்டி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றிய நிலையில், இன்று கடைசி போட்டி ஷார்ஜாவில் நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் குவித்தது. சைம் அயூப் 49 ஓட்டங்களும், இப்திகார் அகமது 31 ஓட்டங்களும், ஷதாப் கான் 28 ஓட்டங்களும் விளாசினர்.
The 1️⃣0️⃣0️⃣th scalp ✅
— Pakistan Cricket (@TheRealPCB) March 27, 2023
A special feat for skipper @76Shadabkhan 🌟#AFGvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/HhmaBFYTRs
ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், பாரூக்கி, நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
@TheRealPCB
சுருண்ட ஆப்கன்
அதன் பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 116 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. துடுப்பாட்டத்தில் மிரட்டிய பாகிஸ்தான் கேப்டன் ஷதாப் கான், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஷதாப் கான் டி20 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை இந்தப் போட்டியில் படைத்தார். டி20 தொடரை இழந்த பாகிஸ்தானுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
🚨 MILESTONE ALERT 🚨@76Shadabkhan becomes the first Pakistan men's cricketer to take 1️⃣0️⃣0️⃣ wickets in T20Is 👏#AFGvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/FO4c5ImTIb
— Pakistan Cricket (@TheRealPCB) March 27, 2023
A strong performance sets up a 6️⃣6️⃣-run victory in the third T20I for Pakistan 👏
— Pakistan Cricket (@TheRealPCB) March 27, 2023
Congratulations @ACBofficials on the series win.#AFGvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/P2VdfjNFjF