மரண அடி கொடுத்த இருவர்! முத்தரப்பு தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
இஃப்திகார் அகமது 14 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 25 ஓட்டங்கள் விளாசினார்
முகமது நவாஸ் 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் எடுத்தார்
நியூசிலாந்தில் நடந்த முத்தரப்பு டி20 தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது.
வங்கதேச அணி ஒரு வெற்றியைக் கூட பெறாததால், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 59 ஓட்டங்களும், பிலிப்ஸ் 29 ஓட்டங்களும் விளாசினர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ராப் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Kane Williamson brings up his 15th T20I fifty but departs shortly ?#NZvPAK | ? Scorecard: https://t.co/1rgjh1HNWM pic.twitter.com/bMNkJvaXmd
— ICC (@ICC) October 14, 2022
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 15 ஓட்டங்களிலும், ஷான் மசூட் 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
First innings frames of the T20 Tri Series Grand Final with @TheRealPCB at Hagley Oval in @ChristchurchNZ. ?= @PhotosportNZ #NZvPAK pic.twitter.com/stHijP0n0Z
— BLACKCAPS (@BLACKCAPS) October 14, 2022
பின்னர் வந்த ஹைதர் அலி அதிரடியாக 15 பந்துகளில் 31 ஓட்டங்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து முகமது நவாஸ் மற்றும் இஃப்திகார் அகமது இருவரும் நியூசிலாந்தின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
இவர்களின் அதிரடியால் பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தானின் முகமது நவாஸும், தொடர் நாயகன் விருதை மைக்கேல் பிரேஸ்வெலும் வென்றனர்.
2️⃣5️⃣ off the 15th over! ?
— Pakistan Cricket (@TheRealPCB) October 14, 2022
Fifty partnership between Haider and Nawaz in just 22 deliveries ?#PAKvNZ | #NZTriSeries pic.twitter.com/OW3KbUiyuh
All smiles for the victors ?✌️#PAKvNZ | #NZTriSeries pic.twitter.com/OV6HKUFhmL
— Pakistan Cricket (@TheRealPCB) October 14, 2022