பாபர் அஸாம் உட்பட 8 வீரர் ஒற்றை இலக்கத்தில் அவுட்: 133 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்
Pakistan 133 all out vs england in 3rd test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் பாகிஸ்தான் 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பர்மிங்காமில் தொடங்கியுள்ள டெஸ்டில், இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.
விக்கெட்டுகள் சரிவு
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமின் எட்ஜ்பஸ்டனில் தொடங்கியுள்ளது.
Robinson gets another ☝️
— England Cricket (@englandcricket) September 9, 2026
Click here for live updates 👉https://t.co/VUdUehsgT2 pic.twitter.com/aBBEhObETK
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.
சைம் அயூப் டக்அவுட் ஆக, அஸான் அவைஸ் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷாஃபிக் (3), ஷான் மசூத் (5) ஆகியோர் நடையைக் கட்டினர்.
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் பாபர் அஸாம் 9Babar Azam) 7 ஓட்டங்களில் ஜோஷ் டங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
133 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
சவுத் ஷகீல் மட்டும் நின்று ஆட, ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக சவுத் ஷகீல் (Saud Shakeel) 47 பந்துகளில் 43 ஓட்டங்களும், மொஹம்மது அப்பாஸ் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஜோஷ் டங் (Josh Tongue) 4 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஓலி ராபின்ஸன் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |